Thursday, December 26, 2013

உலக அதிசயம்: எந்தக் கம்பனி சீமெந்து?














(Pic - Internet)



பாலங்களும் 
பள்ளிக்கூடங்களும் 
விழுந்து போகின்றன.
இருந்தும்..
உடைவதாயில்லை,

தீண்டாமைச்சுவர்!

Monday, December 23, 2013

Sunday, December 22, 2013

குசினிதான் குற்றவாளி!















(Pic- Internet)

நாட்டுக்குள்..
கரைபுரண்டு ஓடுகிறது
நீதி!
என்ன,
போகும் வேகத்தில்
சமையலறை பாத்திரங்களையும்
அது
கொண்டுபோய் விடுகிறது.



சாத்தான்களின் யாவாரம்



















(Pic - Internet)

பிரைவேட் ஹாஸ்பிட்டலில்
மாட்டுக்குடில்.  
மாட்டப்போறார்...
கிரெடிட் கார்ட்  இல்லாத
ஏசுநாதர்!
ஓ பணந்தின்னிகளே....
அந்த ஏழையை விட்டு விடுங்கள்
அவர் தர்மாஸ்பத்திரியிலேயே
பிறக்கட்டும்.

Monday, December 9, 2013

அவ்வை கண்ட நாடு













(Pic - Internet)

வரப்பில்லை
நீரில்லை
நெல்லுமில்லை!
ஆனாலும்,
குடி உயரக்
கோன் உயரும்..
குவாட்டர் சொல்லு!