Thursday, December 26, 2013

உலக அதிசயம்: எந்தக் கம்பனி சீமெந்து?


(Pic - Internet)பாலங்களும் 
பள்ளிக்கூடங்களும் 
விழுந்து போகின்றன.
இருந்தும்..
உடைவதாயில்லை,

தீண்டாமைச்சுவர்!

Monday, December 23, 2013

Sunday, December 22, 2013

குசினிதான் குற்றவாளி!(Pic- Internet)

நாட்டுக்குள்..
கரைபுரண்டு ஓடுகிறது
நீதி!
என்ன,
போகும் வேகத்தில்
சமையலறை பாத்திரங்களையும்
அது
கொண்டுபோய் விடுகிறது.சாத்தான்களின் யாவாரம்(Pic - Internet)

பிரைவேட் ஹாஸ்பிட்டலில்
மாட்டுக்குடில்.  
மாட்டப்போறார்...
கிரெடிட் கார்ட்  இல்லாத
ஏசுநாதர்!
ஓ பணந்தின்னிகளே....
அந்த ஏழையை விட்டு விடுங்கள்
அவர் தர்மாஸ்பத்திரியிலேயே
பிறக்கட்டும்.

Monday, December 9, 2013

அவ்வை கண்ட நாடு

(Pic - Internet)

வரப்பில்லை
நீரில்லை
நெல்லுமில்லை!
ஆனாலும்,
குடி உயரக்
கோன் உயரும்..
குவாட்டர் சொல்லு!

Friday, November 29, 2013

யாவரும் கேளிர்?

(Pic - Vinavu)

Read Here: Tamil Refugees in Tamil Nadu


வந்தாரை எல்லாம்
வாழ வைக்கிறதாம்
தமிழகம்.
"வந்தார்"
எனும் இலக்கணத்துள்
இன்னும்
வரவில்லைப்போலும்
இலங்கை அகதிகள்.

Sunday, November 24, 2013

பணத்தின் நாணயம்
(Pic -Internet)

நேர்மையான காவலாளி
தேவை என்று
அவனை
வேலைக்கு சேர்த்தார்கள்.

முதலாளியின்
முதல் உத்தரவு...
"நான் வீட்டில இல்லேன்னு சொல்லு"

Monday, November 11, 2013

தெருநீதி தின்னும் பேருந்துகள்
(Pic - Internet)

எந்த மாடும்
மணியடித்ததாய் தகவலில்லை.
இருந்தும்...
தெருவெல்லாம்
சோழனின் தேர்கள்.

Wednesday, November 6, 2013

உயிருள்ள அன்பளிப்புகள்


(Pic-Internet)


பிளாட்டினம் செயின்களுக்கும்
டேப்லட்டுக்களுக்கும்
மத்தியில்...
கவனிப்பின்றி  கிடக்கிறது,
கிராமத்து நண்பன் கொடுத்த
நூறு ரூவா  சட்டை.

அந்த சட்டைக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
அது
கடன்காசில் வாங்கப்பட்டது!
 

Friday, November 1, 2013

சாலையில் செல்போன்(Pic -Internet)

அழைத்த இலக்கத்தை
சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
தொடர்பு எல்லைக்குள்
எமலோகம்
வந்திருக்கிறது.

Saturday, October 26, 2013

படியோடு வீடுதிரும்பும் பாமரம்(Pic - Internet)

வகுப்பறையில் இன்னும் சரஸ்வதிதான்.
வாசலில்தான்
லச்சுமி!

Saturday, October 19, 2013

கட்டவுட் தெய்வங்கள்(Pic -Internet)

காவடியாடினார்,
திருவிழா இல்லை;
பாலூத்தினார்,
இழவு  இல்லை;
பட்டாசு கொளுத்தினார்;
கலியாணமும் இல்லை.

சந்தேகமாயிருக்கிறது!
ரிலீசாகியிருப்பது
படமா
பயித்தியங்களா...

Sunday, October 13, 2013

எங்களுடையதெல்லாம் புனிதமாயிருக்கிறது.

(Pic - Internet)

வளைகாப்பு.
களைகட்டிக்  கிடக்கிறது வீடு.
வாசலில்,
சபலக்காரச் சனியன் என
விரட்டப்படுகிறாள்....
புள்ளைத்தாச்சிப்  பிச்சைக்காரி.

Wednesday, October 9, 2013

பிச்சைக்காரனின் பர்மூடா:மனிதனைத் தேடல்(Pic-Internet)

அணு
அண்டத்தின் ஆரம்பம்
ஏன்...
ஆண்டவனைக்கூட கண்டுபிடித்தாயிற்றாம்.
இருந்தும்,
மர்மமாகவே இருக்கிறது
பிச்சைக்காரன் பீச்சும் இடம்.

Tuesday, October 8, 2013

Mr. தொழிலாளி DM HT
(Pic -Internet)


கரியர்  டெவலப்மண்ட் இருப்பதாக சொன்னார்கள்.
வேலைக்கு சேர்ந்தான்.
டெவலப்பாகி இருக்கிறது
சுகரும் பிறசரும்

(DM - Diabetes Mellitus, HT -Hypertension/ High Blood pressure)

Saturday, October 5, 2013

உயிர் சிந்தும் அடிமைகள்

Read : World Cup Slaves
           World Cup Slavery Tamil

வாயில்லாப்  பந்துகள் பாவமாம்.
வந்திருக்கின்றன,
புதிய பந்துகள்...
கண் மூக்கு வாயோடு!

ஆமாம்,
உதை பந்துகளாய்....
எழைகளின் தலைகள்!

Wednesday, October 2, 2013

மவுனம் சம்மதமல்ல


(Pic Internet)

அலுவலகத்தில்
உணவு இடைவேளை.
அதிகாரியின் தட்டில்...
ஏழைப்பெண்ணின்
இயலாமை!

Saturday, September 28, 2013

ஊரின் வளர்ச்சி(Pic- Internet)

பறக்கும்
என....
மக்கள்;
ஓட்டுனர் இருக்கையில்
சினிமா பைலட்ஸ்!

Wednesday, September 25, 2013

மலம் மலராகிறது

(Pic- Internet)


காசு வருமென்றால்
பீயையும் கவர்கின்றன
சில காந்தங்கள் .

ஏதோ பிசினஸ் மக்னட்டாம்!

Tuesday, September 24, 2013

முகத்திரண்டு புண்ணுடை அரசு


(Pic- Internet)

மூடை தூக்குவதாய் வேலை.
மூடையைவிட பாரமாய் இருக்கிறது
வேலை ஒப்பந்தம்.

Monday, September 23, 2013

உலக இராணுவங்களின் சமதர்மம்
(Pic - Internet)
Nanking Massacre

பூக்களோ
பட்ட மரங்களோ
நாய்களின் மரியாதை ஒன்றுதான்!
முகர்தல்
மூத்திரம் பெய்தல்

Wednesday, September 18, 2013

தேர்தல்

(Pic - Internet)

வாக்குச்சீட்டை கொடுத்து
"ஜனநாயகம் உங்கள் கைகளில்"
என்றார்கள்.
திரும்பி வரும்போது பார்க்கிறேன்...
அது
பூட்டிய பெட்டிக்குள் கிடக்கிறது!  

Monday, September 16, 2013

புளிக்கவேண்டாம்

(Pic - Internet)

இனிக்கிறது
கசக்கிறது
என்பதெல்லாம் போய்
புளிக்க ஆரம்பித்திருக்கிறது
காதல்....
அமிலங்களுடன்!

Friday, September 13, 2013

அறியாமையை காசாக்கும் அயோக்கியர்கள்


Maids in the Middle East

(Pic - Internet)

தாகமெடுத்த கிராமங்களுக்கு
குடிநீரென காட்டப்படுகிறது
பட்டணத்தின் கடல்!

Monday, September 9, 2013

பொம்மைகளின் பொம்மைகள்

(Pic Internet)

இது
இயந்திரங்கள் விளையாடும் காலம்.
இப்பொழுதெல்லாம்
உடைந்து போவது...
குழந்தைகள்தான்!

Saturday, September 7, 2013

தேர்தல் இலவசத்தில் கல்வி தாருங்கள்
(Pic - Internet)

எழுத்தறிவித்தலே இல்லை
இருந்தும்
எக்கச்சக்க கடவுள்கள்

Thursday, September 5, 2013

நின்னுட்டே வாங்க பெருசு


(Pic- Internet)

வயதானவர் பஸ்ஸினுள் ஏறும்போது,
வெளியே பார்க்கிறது..
உக்காந்திருக்கும் முகங்கள்

Monday, September 2, 2013

அநியாய நிசப்தம்
(Pic -Internet)

பொத்தானை அழுத்தியதும்...
தொற்றிக்கொள்கிறது,
செயற்கை மௌனம்!

இயந்திரம் மட்டும் பேசுகிறது.

பேய் பிடித்திருக்கிறது போலும்
மின்தூக்கிகளை!

Friday, August 30, 2013

பூரல் பூரித்தல் புடுங்கல்

(Pic - Internet)

ரேஷன் கடை கியூவில் குத்துச்சண்டை.
சக்கரை மூட்டைக்கு
ஒழுங்காக போகின்றன எறும்புகள்!

Tuesday, August 27, 2013

உருமாறும் மனிதர்கள்


(Pic -Internet)

புதிது புதிதாக
முளைத்துக்கொண்டிருக்கின்றன
மிருகக்காட்சி  சாலைகள்.
பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்....
அப்பாட்மண்ட் என!

Friday, August 23, 2013

ஆட்டோன்னா சிவப்பு

(Pic - Internet)


ஆடம்பர கார்களை கண்டால்
பச்சை உடை போட்டுக்கொள்கிறது
ட்ராபிக் போலீசு.

Wednesday, August 21, 2013

அநீதி தேவதைகள்?

படம்: வகுப்பறையில் பணம் திருட்டு போனதற்காக தன்னை ஆசிரியர்கள் தகாதமுறையில் சோதித்ததாக மாணவி திவ்யா அவரது தற்கொலைக்கு முன் எழுதியது -  நன்றி Vinavu"காய்ந்த முகத்தையும்
கிழிந்த சட்டையையும்
கண்டுவிட்டால்
நீதி தேவதையும்
தூக்கிவிடுகிறாள்
ரேஷன்கடை தராசுகளை!"Sunday, August 18, 2013

எரியும் சிறுவர்கள்

ஒவ்வொரு பட்டாசிலும்
வெடித்துச் சிதறுகிறது..
அதை செய்தவர்களின் பால்யம்!

(Pic-Internet)

Friday, August 16, 2013

ரத்தம் கறக்கப்படும் மனித ஒட்டகங்கள்

கலப்படங்களில் சில 
கண்டுகொள்ளப்படுவதில்லை.
அப்படித்தான்...
மசகு எண்ணையில் இருக்கும்
ஆசிய ரத்தமும்!

(Pic-Internet)

Sunday, August 11, 2013

ஒரு தாய் வேசியாகிறாள்

"எம்புள்ள டாக்டரு"
"எம்புள்ள எஞ்சினியரு"
அது..
பெருமைப்பட்ட அம்மாக்களின் காலம்.

இப்ப ஏதோ காலமாற்றமாம்.

பெருமைப்படுகின்றன டம்மிகள்...
"சீச்சீ...
என்  புள்ளைக்கு, தமிழெல்லாம் தெரியாது"

(Pic- Internet)

Friday, August 9, 2013

அவளின் வறுமை; நாளைக்கும் வேலைபொய்யாகிப்போகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி.
தொடர்கிறது....
மேலதிகாரியின் தொடுகை!

(Pic- Internet)

Wednesday, August 7, 2013

தவிச்ச முயல்களும் கள்ள நரிகளும்


இண்டர்வியுவுக்கு போனது...
அவன்!
வேலைக்கு சேர்க்கப்பட்டது,
அவனிடமிருந்து
திருடப்பட்ட ஐடியா!

(Pic- Internet)

Sunday, August 4, 2013

பண்பாட்டுத் தடுப்பூசியும் பிரமிட்டுக்களும்
உள்ளாடைகளுக்குள் பாதுகாக்கப்படுகிறது
கலாசாரம்;
உயிருள்ள "மம்மி"களாக!

(Pic-Internet)

பெண்ணுறுப்பு சிதைப்பு பற்றிய சில தகவல்கள்:
Vinavu
Female Genital Mutilation


Thursday, August 1, 2013

சகோதரன் கண்ணிலுள்ள துரும்புசமுதாயத்தின் குற்றங்களைக் கண்டு
பத்து கற்கள்  எறிந்தேன்;
ஐந்து...
என் தலையில் விழுந்தது!

(Pic-Internet)

Tuesday, July 30, 2013

மளிகைக்கடையில் ஏழையின் உயிர்சாவா
சத்துணவா
எது இலவசம் என்றுதான் புரியவில்லை!

(Pic -Internet)

Monday, July 29, 2013

வறண்ட உயிர்கள்

ஒவ்வொரு விவசாயியின் தற்கொலையிலும்
வெட்டப்படுகிறது....
தேசத்தின் புதைகுழி!

(Pic-Internet)

Sunday, July 28, 2013

பிணங்களின் விளைச்சல்

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்;
தினை விதைத்தவன்
தினை அறுப்பான்.
எதை விதைத்தோம் என
தெரியவில்லை...
அறுத்துக்கொண்டிருக்கிறோம்,
பிணங்களை!

(Pic-Internet)

Thursday, July 25, 2013

பண்பாட்டுப் போர்வையில் சில பயங்கரவாதிகள்


மாட்டுப்பட்டது
மதுவும் புகையும்தான்!
மற்றப்படி,
"தப்பு"ப் பட்டியலில் இருந்து
தப்பிக்கொண்டே இருக்கிறது
தாம்பூலம்!
அப்புறம் சீரியல்!

(Pic-Internet)

Wednesday, July 24, 2013

பெத்தவங்க


பரிசுகளை தட்டிச்  சென்றுவிடுகின்றன
பழங்களும் பூக்களும்;
கேட்பாரற்றுக் கிடக்கிறது
வேர்கள்!

(Pic- Internet)Monday, July 22, 2013

சிங்கம் TRUEகதை திரைக்கதை வசனம் என
ஹாலிவுட்டாகி விடுகிறது
காவல் நிலையங்கள்;
ஏழையின்
எப் ஐ ஆரில்!

(Pic -Internet)

Saturday, July 20, 2013

தமிழ்த்தாய் எந்தச் சாதி?தமிழை பொறுத்தவரை
நீதிமன்றங்கள்
கருவறையாகவே இருக்கின்றன.

(Pic-Internet)

Friday, July 19, 2013

சாதி ஒழிப்பின் முக்காலம்


நிலவை நோக்கிய
பயணம்...
பேரூந்தில்!

(Pic-Internet)

Wednesday, July 17, 2013

டீ(சா)க்கடை அரசியல்


பழைய சோறு
சோயாமீட்
மைதா மாவு
பாண்டல் எண்ணை!
பேரு மட்டும்
உளுந்து வடையாம்!

(Pic-Internet)

Monday, July 15, 2013

ஆண் நாய்கள்!குரைக்கவில்லை;
மனித மொழிதான் பேசுகிறாள்.. 
நீங்கள் 
"Bitch"
 எனச் சொன்ன அந்தப் பெண்

(Pic-Internet)

Saturday, July 13, 2013

தண்ணீரில் தலைவிதி


உடம்பில் இருக்கிறதாம்
நாப்பது லீட்டர்
தண்ணீர்!
கவனம்;
உன் உதிரமும் உறிஞ்சப்படலாம்!

(Pic-Internet)

Friday, July 12, 2013

கோ கிரீன்: சாம்பார்

                                                         
                                                       

அழுகிய காய்கறிகள் கொட்டப்படுகிறது;
குப்பைத் தொட்டியாய்  
எங்கள் வயிறு!

(Pic-Internet)