Saturday, June 29, 2013

இரண்டு மேலாடைகள்

பகலிரவாய் பிரசங்கம்
பகிர்தல் பற்றி;
வாசலில் பிச்சைக்காரன்!

(Pic-Internet)

கொல்லையில் கொடை; பிரசன்டேஷன் ப்ராப்ளம்


வத்தக பழங்களும்
பிடிக்கிறது..
வாட்டர்  மெலோன்ஆன பின்பு!



(Pic - Internet)

Tuesday, June 25, 2013

ரெட்டை நீதி



நாட்டு நடப்புக்குள் தான் வருகிறது
நாங்கள் குடிப்பதெல்லாம்!
பிச்சைக்காரன்
குடிப்பதுதான்.....





(Pic - Internet)

Friday, June 21, 2013

நாங்கள் 1

ரிமோட்டில் பறக்கும் இந்த 
விமானங்களை விட 
எம்
பழைய பேப்பர் பட்டங்கள்
பெறுமதியானவை!
....
அவை நாங்களே செய்தவை!


(Pic Internet)

Thursday, June 20, 2013

பர்கர் பீசா, பருப்பு பாண், பட்டினி.....



பட்டினி பெருகிக்கொண்டே இருக்கிறது!
போட்டியாக,
நிறைந்து கொண்டிருக்கிறது
குப்பைத்தொட்டிகள்...
பணக்காரர் சாப்பாட்டால்!

(Pic -Internet)

Wednesday, June 19, 2013

சிறியோர்க்கு "சீன்"போடல்

கீரைக்கடை ஆச்சியுடனான
பேரம்,
பெரு வெற்றியோடு
முடிவதோடு...
தோற்றுப்போகிறது
மனிதாபிமானம்!

(Pic Internet)

Monday, June 17, 2013

விருந்தோம்பல்!



பாரின் கெஸ்டுக்கு புரியாணி!
பக்கத்து வீட்டில்
பட்டினி!

(Pic-Internet)

Sunday, June 16, 2013

நடமாடும் கல்லறைகள்



கம்பீரம் என நீங்கள் நினைக்கும் 
அந்த கார்களினுள் 
வாழ்ந்துகொண்டிருப்பது,
அவர்கள் மட்டுமல்ல..... 
கல்லறையாகிவிட்ட 
 அவர்களின் 
கனவுகளும் சந்தோஷமும்தான்!
(Pic - Internet)

Medicine

நிபுணத்துவம் அடைந்த பின்...  
தனியார் வைத்தியசாலையில், 
பணக்காரர் வீசியெறியும் 
எலும்புத்துண்டுகளுக்கு 
விற்கப்படுவதற்காக; 
அரசாங்க வைத்தியசாலையில் 
மறுப்பு சொல்ல வழியின்றி படுத்திருக்கும் 
ஏழைகளின் உடம்பில் 
பழகப்படுகிறது......
மருத்துவம்! 

22 July 2011
(Pic -Internet)

Dr.பிச்சையப்பா

அந்த பணக்கார ஆசுப்பத்திரியில் 
சில 
படித்த பிச்சைக்கார உருவங்கள்.
விசாரித்தபோதுதான்
தெரியவந்தது.....
டாக்டர்களாம்! 

-14 July 2011

Friday, June 14, 2013

நம்ம படிப்பு


பராக்கிரமபாகு கட்டிய

குளம் தெரியும்.

பாட்டனது வீடு?

 - 25 June 2011

நீதித்துறை

கோவணம் களவாடப்பட்டதாய்
வழக்கு;
காணி விற்று
வாங்கப்பட்டது 
நீதி.

- 09 July 2011
(Pic- Internet)

வாழ்க்கை

ஐம்பதில் வளையாது 
என்பதற்காக, 
ஐந்தில் வளைத்தார்கள்.
 ..............
 நிமிர்த்தமுடியவில்லை!

- 03 July 2011

ஏமாற்றம்

'எறும்பு தானாய் வரும்'
என்றார்கள்.
கட்டோடிருந்தன கரும்புகள்...

குப்பை லொறி வந்திருக்கிறது!

நீதியில்லை; பேதி!

மாடு கேட்டதற்காய்
மனிதச்சாவா?
ஏறி மிதிக்க - என்ன
கடலை மாவா?

Note: மநுவை எம்தலையில் கட்டத்தான் இந்த பாடத்தை போட்டிருக்கிறார்கள் என்பதே தெரியாத வயது அது. திருக்குறள் கூட இல்லாத "தமிழ் இலக்கிய" புத்தகம், ஆனால் தமிழனை கேவலப்படுத்தும் "ரீ-மேக்" பாடத்துடன் தொடங்கும்!

கலாசார சீரழிவு...


அம்மா தந்த காப்பிக்கு 
'தெங் யூ' 
சொல்லும்போதும்! 

('நன்றி' சொல்லி இருக்கணும்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க)

உலகத்தின் இயலாமை






யாரோ கள்ளனாம்.
ஆனால்..
என்னைத்தான் கட்டுகிறார்கள்!

இசைதான் பாவம்!











ஷங்கீதத்தை கும்பிடுபவர்கள்
மியுசிக்கை
வேண்டாம் என்கிறார்கள்.

தமிழ் பற்றாம்!
இசைதான் பாவம்!