Friday, August 23, 2013

ஆட்டோன்னா சிவப்பு

(Pic - Internet)














ஆடம்பர கார்களை கண்டால்
பச்சை உடை போட்டுக்கொள்கிறது
ட்ராபிக் போலீசு.

8 comments:

  1. கண்ணை கசக்கும் சூரியனோ
    ரெட் ரெட் ரெட்
    காணும் மண்ணில் சரி பாதி
    ரெட் ரெட் ரெட்
    உடம்பில் ஓடும் செங்குருதி
    ரெட் ரெட் ரெட்
    உளைக்கும் மக்கள் உள்ளங்கை
    ரெட் ரெட் ரெட்

    நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
    அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
    நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
    அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
    அட வறுமையின் நிறமா சிவப்பு?
    அதை மாற்றும் நிறமே சிவப்பு!

    பிள்ளை தமிழ் இனமே
    எழு! எழு! எழு!
    அறிவை ஆண்டவனாய்
    தொழு! தொழு! தொழு!
    நீலும் ஆகாயம்
    தொடு! தொடு! தொடு!
    நிலவை பூமியிலே
    நடு! நடு! நடு!

    கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
    காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
    கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
    வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்

    சரியா? சரியா?
    ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா!
    முறையா?
    ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா!

    குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே
    படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே
    (குடிக்கும்...)
    (கண்ணை கசக்கும்...)

    என் தமிழ் நாட்டின் மக்கள் தொகையோ ஆறு கோடிகள்
    இந்திய நாட்டின் மக்கள் தொகையோ நூறு கோடிகள்
    மனிதனை மனிதன் சாப்பிடும் முன்னே தடுத்து நிறுத்துங்கள்
    உங்கள் அரிசியில் உங்கள் பெயருண்டு உளைத்தே உண்ணுங்கள்

    குழந்தாய்! குழந்தாய்!
    இது போட்டி உலகம் போட்டி போட்டு முந்தி விடு
    பொண்ணே!
    இது நாடு அல்ல புலிகள் வாழும் காடு

    உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
    உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே
    (கண்ணை கசக்கும்...)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்! கல்வித்தெய்வம் வீணை விற்றது சம்பந்தமான வரிகள் சில நம்மிடமும் உள்ளது. பகிர்கிறேன்.

      Delete
  2. நாம ஏன் அப்படி நினைக்கனும்.. இப்படி யோசிச்சு பாருங்களேன், சரியான வழி போறவங்களுக்கு சரியான வழிகாட்டல்...

    ReplyDelete
  3. நன்றி பிரியா. உங்கள் கருத்தை சற்று விளக்கமாக சொல்லுங்கள்.ப்ளீஸ்.

    மேலே நான் சொன்னது இதுதான்..... ட்ராபிக் போலீசு பணக்காரர்களுக்கு சல்யூட் அடித்துக்கொண்டு ஏழைகளை வில்லங்கமாக பிடித்துக்கொள்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அது புரிந்தது நிரோஷான் அனைத்து கெட்டதிலும் ஒரு நல்லதை தேடுவோமே என்று சொன்னேன் அவ்வளவே.... தங்களின் தளம் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளமைக்கு வாழ்த்துக்க்ள்...

      Delete
    2. புரிந்துகொண்டேன். பதிலுக்கும் தகவலுக்கும் நன்றி பிரியா. அப்படியே எந்த தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லுங்கள். பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.

      Delete
    3. கதம்ப மாலை தளத்தைத்தான் கூறினேன்... அதை நீங்கள் பார்த்து விட்டீர்களே.. அதனால்தான் லின்க் தரவில்லை...

      Delete